கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம் - ஜனதாதளம் (எஸ்) கட்சி 

April 29, 2023

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குமாரசாமி தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் […]

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குமாரசாமி தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, இளம் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu