முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி: மத்திய அரசு

September 1, 2022

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக 240 ரூபாய் பிடிக்கப்படும். தற்போது இத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும். அதோடு, இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட் 200 ரூபாயுடன் 5 […]

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக 240 ரூபாய் பிடிக்கப்படும். தற்போது இத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும். அதோடு, இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட் 200 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட் 180 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி என சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu