அமெரிக்கா: 'பேரன்ஸ் செல்வாக்கு மிக்க பெண்கள்' பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 இந்திய வம்சாவளிப் பெண்கள்

April 6, 2023

பேரன்ஸ் என்ற அமெரிக்க வார இதழில், ‘அமெரிக்க நிதியத்தில் செல்வாக்குமிக்க 100 பெண்கள்’ என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனு ஐயங்கார், ரூபால் ஜே. பன்சாலி, சோனல் தேசாய், மீனா பிளைன் மற்றும் சவிதா சுப்பிரமணியன் ஆகியோர் ஆவர். அனு ஐயங்கார், ஜேபி மார்கன் மெர்ஜர்ஸ் அண்ட் அக்யூசிசன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக பணியாற்றி வருகிறார். ரூபால் ஜே. பன்சாலி, ஏரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக […]

பேரன்ஸ் என்ற அமெரிக்க வார இதழில், ‘அமெரிக்க நிதியத்தில் செல்வாக்குமிக்க 100 பெண்கள்’ என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனு ஐயங்கார், ரூபால் ஜே. பன்சாலி, சோனல் தேசாய், மீனா பிளைன் மற்றும் சவிதா சுப்பிரமணியன் ஆகியோர் ஆவர்.

அனு ஐயங்கார், ஜேபி மார்கன் மெர்ஜர்ஸ் அண்ட் அக்யூசிசன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக பணியாற்றி வருகிறார். ரூபால் ஜே. பன்சாலி, ஏரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். சோனல் தேசாய், பிராங்கிளின் டெம்பிள்டன் என்ற உலகளாவிய முதலீட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமை முதலீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பணி செய்து வருகிறார். மேலும், இவர் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார்.

மீனா பிளைன், கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தின் நிதி மேலாண்மை துறையின் இணை தலைவராக உள்ளார். மேலும், ஜேபி மார்கன் நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். சவிதா சுப்பிரமணியன், பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் மற்றும் மூல உபாய தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த பட்டியல் மூலம், பெண்களின் நிதி ஆளுமை திறனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu