இந்தியா அழைத்து வருவதற்காக, சூடான் துறைமுகத்திற்கு 500 இந்தியர்கள் பத்திரமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையேயான உள்நாட்டு போர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. சூடானில் சிக்கியிருக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர ஒன்றிய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஐஎன்எஸ் சுமேதா மீட்பு கப்பல் சூடான் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் சி-130ஜே 2 ராணுவ போக்குவரத்து விமானங்கள் சவுதியின் ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 500 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.