Tata Curvv கான்செப்ட் EV வெளியான பிறகு, Tata Passenger Electric Mobility ஆனது(TPEM) “அவின்யா” கான்செப்ட் EV-ஐ வெளியிட்டது. இது குறித்து ௯றிய TPEM , Avinya முற்றிலும் புதிய GEN 3 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. காரின் புதிய வடிவமைப்பு கேடமரனில் இருந்து உத்வேகம் பெறுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக், MPV மற்றும் SUV ஆகியவற்றின் கலவையாகும். அத்துடன் Curvv EV உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய EV காரின் வெளித்தோற்றமானது, முன்புறத்தில் கிடைமட்ட நீளமான LED DRL மற்றும் பின்புறம் டாடா கர்வ்வியில் உள்ளத வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும், புதிய அவின்யா கான்செப்ட் EV மேம்படுத்தப்பட்ட விசாலமான கேபினுக்கான பட்டாம்பூச்சி கதவுகளுடன் , ஒரு மினிமலிஸ்ட் கேபினைக் கொண்டுள்ளது. மேலும் புதிய Pure EV Gen 3 கட்டமைப்பு நுகர்வோருக்கு இணைப்பு, மேம்பட்ட இயக்கி அமைப்புகள் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.மேலும் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, புதிய கான்செப்ட் GEN 3 இயங்குதளமானது இலகுரக பொருட்களைப் பயன்படுத்தி பவர்டிரெய்னுக்கான கட்டமைக்கப்பட்டுள்ளது” மற்றும் இதன் சிறப்பம்சம் Avinya கான்செப்ட் EV ஆனது குறைந்தபட்சம் 500 கிமீ தூரத்தை 30 நிமிடங்களுக்குள் கடக்கும். எனவே இது அடுத்த தலைமுறை EVகளை நோக்கிய மாபெரும் முன்னேற்றம்” என்றும் 2025 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.