தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் சுபமுகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறைகளை ஒட்டி சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வாராந்திர விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பேருந்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி கிளாம்பக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இடங்களுக்கும், மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 11ஆம் தேதி சொந்த ஊர் சென்று திரும்பும் மக்கள் வசதிக்காக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளனர். மேலும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.