அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கை எலிமெண்ட்ஸ் நிறுவனம், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, 5000 ட்ரோன்களை கொண்டு அற்புதமான ஒரு ஒளி விளக்க நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இது, கின்னஸ் உலக சாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
யுவிஃபை என்ற நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கலைமான் இழுக்கும் வண்டியில் சாண்டா கிளாஸ் பறந்து செல்லும் காட்சி வானில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. மாலை வானில் இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, 98 மில்லியன் பார்வைகளையும் 5.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. பலரும் “சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வான வேடிக்கைகளுக்கு சிறந்த மாற்றாக இது உள்ளது” என்று பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சி, நவீன தொழில்நுட்பம் மற்றும் பண்டிகை உற்சாகம் இரண்டையும் ஒன்றாக இணைத்து மக்களை மகிழ்வித்துள்ளது.