பொங்கலுக்கு முன் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில், இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டுவிடும். ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு பெற போகிறது என்று கூறினார்.