தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுத் தேர்வின் போது பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத்தேர்வில் 49 ஆயிரம் பேரும், ஆங்கிலப் பாடத் தேர்வில் 50 ஆயிரம் பேரும் தேர்வு எழுத வரவில்லை. அதனால் அவர்கள் அனைவரையும் மீண்டும் தேர்வு எழுத வைக்க அனைத்து ஏற்பாடும் செய்யப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் திரும்ப தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.