2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். சோனியா காந்தியும் இன்று கலந்து கொள்கிறார்.
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா படகு சோதனை நடந்தது.
கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட சீக்கிய குடும்பம் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.