நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 50 வது கூட்டத்தில், ஆன்லைன் கேம்களுக்கான வரியை 28% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குதிரை பந்தயம், ஆன்லைன் கேம், கேசினோ போன்றவற்றுக்கு 28% ஆக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுகிறது. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்படுகிறது. இது, முன்னதாக 18% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல, எல்டி ஸ்லாக், ஃப்ளை ஆஷ், இமிடேஷன் ஜரி நூல் போன்றவற்றுக்கும் 18% ல் இருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது.