கலபுரகியில் 51, 900 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 51 ஆயிரத்து 900 லம்பானி குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். ஒரே முறை இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இலவச பட்டாக்கள் வழங்குவது சாதனை என்பதால் இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், முந்தைய ஆட்சியாளர்கள் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவில்லை. இவற்றை வளர்ச்சி அடையச் செய்வது தான் பா.ஜ.,வின் முக்கிய நோக்கம். இதற்காகவே நாட்டின் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கர்நாடகாவின் 10 மாவட்டங்களும் உள்ளன. இவற்றில் படிப்படியாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.














