பண மோசடி தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் வீட்டில் சிபிஐ சோதனை

இந்தியாவில், திவாலான விமான போக்குவரத்து நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாலான் - கால்ராக், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. அதன்படி, நிகழாண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மும்பையில் உள்ள […]

இந்தியாவில், திவாலான விமான போக்குவரத்து நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாலான் - கால்ராக், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. அதன்படி, நிகழாண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மும்பையில் உள்ள அவர்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிபிஐ சோதனை நிறைவடைந்த பிறகு, சிபிஐ தரப்பில் தெரிவித்ததாவது: “கனரா வங்கியில் பெறப்பட்ட 538 கோடி ரூபாயை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பதியப்பட்ட வழக்கில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தொகையை, நிறுவன செயல்பாடுகளுக்கு அல்லாமல், இதர விஷயங்களுக்கு பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 2011 முதல் ஜூன் 2019 வரை, நிறுவனத்திற்கான ஆலோசனை சேவைகளுக்கு 1152 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில், 420 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 197 கோடி ரூபாய் சந்தேகத்துக்கிடமான பரிமாற்றமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu