முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்ப உள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பலவேறு தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் நிறுவனங்கள் உடன் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதில் எடிபன் நிறுவனத்துடன் ரூபாய் 540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலில் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பல பயனுள்ள முடிவுகளுடன் நாளை புறப்பட உள்ளதாக தனது சமூக வலைதளத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.