அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.55 கோடியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடி செலவில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. அரசு, கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடி செலவில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது.

அரசு, கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இது இணைந்து செயல்படும். இந்த திட்ட செலவுக்கு மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 50 சதவீத நிதி வழங்கியுள்ளது. தமிழக அரசு 37 சதவீத நிதியுதவியும், தொழில் நிறுவனங்கள் மூலம் 13 சதவீத நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu