பராமரிப்பு பணி காரணமாக 55 மின்சார ரயில்கள் நாளை முதல் ரத்து

தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்தி குறிப்பில் நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக மாற்று ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகின்றது. அதற்கு பதிலாக சிறப்பு […]

தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்தி குறிப்பில் நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக மாற்று ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகின்றது. அதற்கு பதிலாக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக கூடுதல் பேருந்து சேவைகளும் இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு பலகைகள் மூலமாக பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu