கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கேஆர்எஸ் அணையிலிருந்து 700 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு செல்லும் காவிரி கால்வாயிலும், 1700 கன அடி பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நுகு அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.