குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு

February 25, 2023

குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு பிறகு புதிய அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் கனுபாய் தேசாய் தாக்கல் […]

குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு பிறகு புதிய அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் கனுபாய் தேசாய் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், குஜராத்தில் பழைய பாலங்களை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 நெடுஞ்சாலைகளை அதிவேக சாலைகளாக மேம்படுத்த ரூ.1,500 கோடியும், காந்திநகரில் கிஃப்ட் சிட்டிக்கு அருகில் சபர்மதி ஆற்றங்கரை மேம்பாட்டுக்கு ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu