கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5598 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.64 கன அடி தண்ணீர் இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 5.578 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் இருந்து காவிரிக்கு வினாடிக்கு 3598 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதே போல மைசூர் மாவட்டத்திலுள்ள கபினி அணையிலிருந்து வினாடிக்கு 2684 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு 5598 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.