ஆப்பிரிக்க நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து - 58 பேர் பலி

April 23, 2024

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலியாகி உள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா ஆறு செல்கிறது. இங்குள்ள மக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல இந்த ஆற்றை கடந்தாக வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தை நம்பியுள்ளனர். இதனால் இங்கு அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், பாங்குய் அருகே உள்ளூர் தலைவர் ஒருவர் இறந்து போனார். அவருடைய […]

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா ஆறு செல்கிறது. இங்குள்ள மக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல இந்த ஆற்றை கடந்தாக வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தை நம்பியுள்ளனர். இதனால் இங்கு அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், பாங்குய் அருகே உள்ளூர் தலைவர் ஒருவர் இறந்து போனார். அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து மக்கள் படகில் புறப்பட்டனர். அந்த படகு புறப்பட்ட சில நேரத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தை அறிந்து உள்ளூர் மீனவர்கள் நீரில் தத்தளித்து கொண்டிருந்த மக்களை மீட்க முயன்றனர். அந்த இடத்திற்கு மீட்பு படையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் 300 பேர் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. படகு பாரம் தாங்காமல் தான் கவிழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu