கேரளாவில் 8 ஆண்டுகளில் 5839 பேருக்கு அரசு வேலை

கேரளாவில் 2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் 5839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. கேரளா சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி தகவல் அரியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது அரசு சார்பில் அளித்த பதிலில் கேரள மாநில அரசு சார்பில் ரூபாய் 1520.69 கோடி முதலீட்டில் 5839 பேருக்கு […]

கேரளாவில் 2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் 5839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கேரளா சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி தகவல் அரியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது அரசு சார்பில் அளித்த பதிலில் கேரள மாநில அரசு சார்பில் ரூபாய் 1520.69 கோடி முதலீட்டில் 5839 பேருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் வழங்கிய நிதி உதவியால் 119 நிறுவனங்கள் முதலீடு செய்து ஊக்குவித்துள்ளன. இதன் மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொழில் வர்த்தக இயக்குனராகம் 22 மாதங்களில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 384 நிறுவனங்கள் மூலம் ரூபாய் 142 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu