முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 588 பேருக்கு தலா ரூ.22 லட்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் விளங்குகிறது. தொடர்ந்து 6 முறை உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்கான மத்திய அரசு விருதை தமிழகம் பெற்றுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1,634 கொடையாளர்களிடமிருந்து 9,752 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 588 நபர்களுக்கு சிகிச்சைக்காக அதிகபட்சமாக தலா ரூ.22 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.