கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 7 சுற்றுகளுக்கு பிறகு இன்று காலை 11:30 மணி அளவில் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 11300 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் அதிகமான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வசம் போதிய அளவு அலைக்கற்றைகள் இருப்பதாகவும், அதனை புதுப்பிப்பது மட்டுமே நிகழாண்டில் நடைபெறும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அங்கம் வகிக்கும் எனவும், சொல்லப்பட்டது. எதிர்பார்த்தபடியே ஏலம் நிறைவடைந்துள்ளது. சுமார் 5400 கோடி மதிப்பில் ஏர்டெல் நிறுவனமும், 1900 கோடி ரூபாய் மதிப்பில் ஜியோ நிறுவனமும் ஏலத்தில் செலவிட்டுள்ளன. வோடபோன் 4650 கோடி ரூபாய் செலவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.