ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் மீட்பு பணி முழுமையாக முடியவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.