சீனா உள்பட 6 நாடு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

December 29, 2022

அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், […]

அடுத்த வாரம் முதல் சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும் தங்களின் உடல்நிலை குறித்து தாங்களே சான்றளிக்கும் ஏர் சுவிதா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பது கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu