மெக்சிகோவில் கனமழை - 6 பேர் பலி

September 18, 2024

மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகினர். மெக்சிகோ நகரின் வடமேற்கே உள்ள நௌகல்பானில் திங்கள்கிழமை இரவு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டன. இதில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்கள் பணிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், மெக்சிகோவுக்கு மேற்கே உள்ள ஜிலோட்ஸிங்கோவில் சனிக்கிழமை மற்றொரு நிலச்சரிவில் 3 மாத குழந்தை உட்பட […]

மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகினர்.

மெக்சிகோ நகரின் வடமேற்கே உள்ள நௌகல்பானில் திங்கள்கிழமை இரவு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டன. இதில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்கள் பணிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், மெக்சிகோவுக்கு மேற்கே உள்ள ஜிலோட்ஸிங்கோவில் சனிக்கிழமை மற்றொரு நிலச்சரிவில் 3 மாத குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் நௌகல்பானில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் 34 வயதுடைய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் அச்சத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu