இலங்கையில் கனமழை - 6 பேர் பலி

May 25, 2024

இலங்கையில் பலத்த கனமழை பெய்தது. இதில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் கன மழை காரணமாக மரங்கள் விழுந்ததில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயம் அடைந்தனர். 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த கனமழையின் போது பலத்த காற்றும் வீசியது. இதனால் 1246 வீடுகள் சேதம் அடைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மலைப்பகுதியில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை மையம் […]

இலங்கையில் பலத்த கனமழை பெய்தது. இதில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் கன மழை காரணமாக மரங்கள் விழுந்ததில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயம் அடைந்தனர். 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த கனமழையின் போது பலத்த காற்றும் வீசியது. இதனால் 1246 வீடுகள் சேதம் அடைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மலைப்பகுதியில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடா பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதையடுத்து மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu