நைஜீரியாவில் பயணிகள் பேருந்து மீது ரெயில் மோதி 6 பேர் பலி

March 10, 2023

நைஜீரியாவில் பயணிகள் பேருந்து மீது ரெயில் மோதி 6 பேர் பலியாகினர். நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பேருந்து மீது ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது. ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]

நைஜீரியாவில் பயணிகள் பேருந்து மீது ரெயில் மோதி 6 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பேருந்து மீது ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது. ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை. பேருந்தில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu