மின் ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு

February 3, 2023

மின் ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர்கள், பொறியாளர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு 2019 டிசம்பர் முதல் நிலுவையில் உள்ளது. புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழு 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஜன. 9ல் நடந்த பேச்சில் 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக நிர்வாகம் தரப்பில் […]

மின் ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர்கள், பொறியாளர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு 2019 டிசம்பர் முதல் நிலுவையில் உள்ளது. புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழு 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஜன. 9ல் நடந்த பேச்சில் 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த சூழலிலும் ஊழியர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 15 முதல் 25 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தி இறுதி செய்யப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu