அமெரிக்கா - துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 6 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்

January 7, 2023

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், ரிச்நெக் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு, 6 வயது பள்ளி சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் சிறுவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவன், திடீரென்று வகுப்பறையில் துப்பாக்கியை எடுத்து சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் […]

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், ரிச்நெக் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு, 6 வயது பள்ளி சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் சிறுவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவன், திடீரென்று வகுப்பறையில் துப்பாக்கியை எடுத்து சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்க்கர், “இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் மனவேதனை தருவதாகவும் உள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கைகளில் துப்பாக்கி கிடைக்காததை நாம் உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார். அண்மையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உலக அரங்கில் பேசு பொருளான நிலையில், இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu