சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இரண்டு மாதங்களாக சண்டை நீடித்து வரும் நிலையில், கார்ட்டூமில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில், போதிய உணவு இல்லாதது மற்றும் காய்ச்சலால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
கடந்த வார இறுதியில், 2 நாட்களில் 26 பேர் இறந்ததாக ஒரு செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. ஆதரவற்றோர் இல்ல அதிகாரிகள் மற்றும் தொண்டு பணியாளர்களின் அறிக்கைப்படி, இறந்தவர்களில் மூன்று மாத கைகுழந்தைகளும் அடங்குவர். மேலும் சுமார் 60 கைக்குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.