கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளில் 60% கன்னட மொழி கட்டாயம் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகங்கள்,பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிக அளவில் ஆங்கிலப் பெயர் பலகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து பெயர் பலகைககளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் மாநகராட்சி தலைநகரில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் 60 % கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று இது குறித்த தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது. தற்போது நடந்து வரும் கர்நாடகா பட்ஜெட் கூட்ட தொடரில் வெள்ளிக்கிழமை இந்த மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இன்று சட்டமேலவையில் இந்த மசோதா மீதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய சட்டம் விரைவில் அமல் படுத்த பட உள்ளது.