ஆவினில் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதி

February 20, 2023

பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் தினமும் 60 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், தமிழகத்தில் 23 பால் பண்ணைகளில், மொத்தம் 48.78 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் உள்ளது. வருங்காலங்களில் இந்த அளவு போதுமானதாக இருக்காது. அடுத்த 3 ஆண்டுகளில் 60 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்த வேண்டியிருக்கும். […]

பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் தினமும் 60 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், தமிழகத்தில் 23 பால் பண்ணைகளில், மொத்தம் 48.78 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் உள்ளது. வருங்காலங்களில் இந்த அளவு போதுமானதாக இருக்காது. அடுத்த 3 ஆண்டுகளில் 60 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக ஆவின் பால் பண்ணைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாதவரத்தில் ரூ.110 கோடியில் 10 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் வகையில் புதிய பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கு நபார்டு வங்கி நிதியுதவி அளிக்கிறது. இந்த பால் பண்ணை வடிவமைப்பு, நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu