டோங்கா தீவுகளில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசுபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அமைந்துள்ளது. இந்த தீவுகளில் மக்கள் தொகை ஒரு லட்சம் ஆகும். இந்த தீவுகளில் சிலவற்றில் எரிமலைகள் உண்டு. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை டோங்கா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 9 மணி அளவில் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் 155.2 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி டோங்காவின் ஹிஹிவா நகரில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.














