பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு 

பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள் வந்துள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறுகையில், இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி […]

பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள் வந்துள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறுகையில், இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது. குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்றுவிடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் ஒருவர் உடன் செல்வார் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu