பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது 

July 1, 2023

பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். […]

பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu