பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே மோதல் - 64 பேர் பலி

February 19, 2024

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே நடைபெற்ற மோதலில் 64 பேர் உயிரிழந்தனர். பசப்பிக் கடலில் இந்தோனேசியா அருகில் பப்பு நியூ கினியா தீவு உள்ளது. இதனை சுற்றி பல தீவுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று பழங்குடியினரை சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி […]

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே நடைபெற்ற மோதலில் 64 பேர் உயிரிழந்தனர்.

பசப்பிக் கடலில் இந்தோனேசியா அருகில் பப்பு நியூ கினியா தீவு உள்ளது. இதனை சுற்றி பல தீவுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று பழங்குடியினரை சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சண்டை எங்கா மாகாணத்தில் நடைபெற்றது. இது மிகப்பெரிய மோதல் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது உட்பட கணிசமான ஆதரவுகளை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பசுபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்றளவும் பிற மனிதர்களின் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டு எங்கோ மாகாணத்தில் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu