கனடாவில் 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புதிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியில மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. முதலில் இது 6.6 என்ற அளவில் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் 6.4 ஆக குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் மக்கள் அஞ்சியபடியே வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.