சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் பட்டியல் - இந்தியா 2ம் இடம்

June 14, 2023

சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் ரிப்போர்ட் என்ற அறிக்கையில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக, அதிக சொத்து படைத்த செல்வந்தர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் இருந்து 13500 பேரும், இந்தியாவில் இருந்து 6500 பேரும் இந்த ஆண்டு […]

சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் ரிப்போர்ட் என்ற அறிக்கையில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக, அதிக சொத்து படைத்த செல்வந்தர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் இருந்து 13500 பேரும், இந்தியாவில் இருந்து 6500 பேரும் இந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, 2022 ஆம் ஆண்டில் 10800 மற்றும் 7500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நிகழாண்டில், இந்தியாவிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் இந்தியாவை தொடர்ந்து, 1600 பணக்காரர்கள் வெளியேற்றத்துடன், இங்கிலாந்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu