வாக்காளர் பட்டியலில் இணைக்க 66 சதவீதம் பேர் 'ஆதார்' சமர்ப்பிப்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க 66.24 சதவீத பேர் தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர். தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆண்டு ஆக., 1ல் துவங்கியது. அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர். இப்பணி இம்மாதம் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. https://www.nvsp.in என்ற இணையதளம் வழியாக 'Voter Help Line' மொபைல் செயலி வழியே ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க 66.24 சதவீத பேர் தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர்.

தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆண்டு ஆக., 1ல் துவங்கியது. அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர். இப்பணி இம்மாதம் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. https://www.nvsp.in என்ற இணையதளம் வழியாக 'Voter Help Line' மொபைல் செயலி வழியே ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

துவக்கத்தில் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக ஆதார் எண் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது, இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 66.24 சதவீதம் பேர் அதாவது 4.08 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu