சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
சீனாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசு மேற்கொண்டது. சோதனையில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இணையதள விவகார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது














