67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு - 6 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை

April 19, 2023

பூமியில், சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் ராட்சச டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு, தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. சுமார் 3.9 மீட்டர் உயரம், 11.6 மீட்டர் நீளம் கொண்ட இந்த எலும்புக்கூடு, 3 வெவ்வேறு டைனோசர்களின் எலும்புக் கூடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும். மொத்தமாக, இதில் 293 எலும்புகள் உள்ளன. இவை, கடந்த 2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவின் மொன்டானா, வயோமிங் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை ஆகும். மேலும், பாதிக்கும் மேலான எலும்புக்கூடுகள் […]

பூமியில், சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் ராட்சச டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு, தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. சுமார் 3.9 மீட்டர் உயரம், 11.6 மீட்டர் நீளம் கொண்ட இந்த எலும்புக்கூடு, 3 வெவ்வேறு டைனோசர்களின் எலும்புக் கூடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும். மொத்தமாக, இதில் 293 எலும்புகள் உள்ளன. இவை, கடந்த 2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவின் மொன்டானா, வயோமிங் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை ஆகும். மேலும், பாதிக்கும் மேலான எலும்புக்கூடுகள் உண்மையானவை என்றும், மற்றவை போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

TRX 293 TRINITY என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. Tyrannosaurus என்ற வகை டைனோசரின் இந்த எலும்புக்கூடு, 6.13 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதலான தொகைக்கு இது விற்பனையாகும் என்று கருதப்பட்ட நிலையில், குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள் விற்கப்படுவது ஐரோப்பாவில் முதல் முறையாகவும், சர்வதேச அளவில் மூன்றாம் முறையாகவும் சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu