அறநிலையத்துறையின் ஆன்மிக பயணத்தின் முதல் அணியில் 67 பேர் காசிக்கு புறப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலும் ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, தகுதி வாய்ந்த 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, 3 அணிகளாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதில் முதல் அணி நேற்று (பிப்.22) சென்றுள்ளனர். இரண்டாம் அணி மார்ச் 1ம் தேதியன்றும், மூன்றாம் அணி மார்ச் 8ம் தேதியன்றும் புறப்படுகின்றனர்.
ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 பயனாளிகள் நேற்று காலை ராமேஸ்வரத்திற்கு வந்து அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.