மொராக்கோ கடல்பகுதியில் ஒரு படகு மூழ்கி 69 அகதிகள் உயிரிழந்தனர்.
கடந்த டிசம்பர் 19-ந் தேதியன்று, 80 பேருடன் பயணித்த அந்த படகு, ஸ்பெயினை நோக்கி செல்லும்போது மொராக்கோ கடலில் மூழ்கியது. இதில் 69 பேர் பலியாகினர்.
அதில் 25 பேர் மாலி நாட்டினராவர். மேலும், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடி, 11 பேர் மீட்கப்பட்டனர். அதில் 9 பேர் மாலி நாட்டினர். மாலியில் ஜிகாத் மற்றும் பிரிவினைவாத வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனர். மொராக்கோ மற்றும் ஸ்பெயின் இடையே 14 கி.மீ தூரம் உள்ளதால், அகதிகள் அங்கிருந்து படகில் பயணிக்கின்றனர்.