அரசியல் தடைகளை உடைக்க பொதுத் தேர்தலில் வாக்களிக்குமாறு குடிமக்களை வலியுறுத்துகிறார் இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் .
எலோன் மஸ்க் இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப நிர்வாகியான ஸ்ரீராம் கிருஷ்ணன் உதவியுடன் டுவிட்டரை மறுசீரமைக்கிறார்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பாதுகாப்பு ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. ஆப்பிரிக்காவின் கடல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவால் முடியும் என எக்ஸிம் வங்கி அறிக்கை ௯றியுள்ளது.
2 நாள் அரசு பயணமாக சீனா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இ௫நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மோர்பி பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத்திற்கு ஐநா தலைவர் குட்டரெஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.