கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவில் 7.3 லட்சம் அளவில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, ஓலா நிறுவனத்தின் மின்சார வண்டிகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்த இருசக்கர வாகன விற்பனையில் கிட்டத்தட்ட 22% ஓலா வாகனங்கள் என சொல்லப்படுகிறது. மின்சார வாகன உற்பத்தியாளர் சங்கம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில், 1152021 என்ற எண்ணிக்கையில் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில், மின்சார பேருந்துகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடங்கும். குறிப்பாக, இருசக்கர வாகன விற்பனை மாதத்திற்கு சராசரியாக 60,000 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 3 மடங்கு உயர்வாகும். தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு வரையில் மின்சார வாகன விற்பனை உயரும் எனவும், இந்தியாவில் இதற்கான சந்தை வாய்ப்பு ஆரோக்கியமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.