பசுபிக் கடற்கரையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம்; மக்கள் பீதியில் வெளியேறினர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது. சாண்ட் பாயிண்ட் நகரத்திற்கு தெற்கே 87 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம், வீடுகள், கட்டிடங்களை மிகுந்த அதிர்வுடன் குலுக்கியது. மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். தெற்கு அலாஸ்கா மற்றும் தீபக் கருப்பு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடலில் 6.1 செ.மீ. உயரம் கொண்ட அலைகள் எழுந்தன. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.














