அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு

June 9, 2023

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து டிரம்ப் […]

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், நான் குற்றமற்றவன். ஒரு முன்னாள் அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என எண்ணவில்லை. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமாகும். நாம் அனைவரும் ஒன்று இணைந்து அமெரிக்காவை ஒரு ஒழுங்கான நாடாக மாற்ற உழைப்போம் என கூறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu