குடியரசு தின விழாவில் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேருக்கு கௌரவம்

January 25, 2024

டெல்லியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதில் சுகாதார ஊழியர்கள் 7 பேரை ஊக்குவிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பொறுப்பாளர்களை கௌரவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து […]

டெல்லியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதில் சுகாதார ஊழியர்கள் 7 பேரை ஊக்குவிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பொறுப்பாளர்களை கௌரவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் முழு சுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சேர்த்து 10 பேர் கொண்ட குழுவினர் விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்படுகின்றனர். அங்கு தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu