சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலம் நாது லாகணவாய். இங்கு சாங்கு என்ற இடத்துக்கு அருகே ஜவஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல்கல் பகுதியில் நேற்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 அல்லது 6 வாகனங்களில் சென்ற 20 முதல் 30 பேர் சிக்கினர். இவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 4 மணி வரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த இடத்தின் சாலையை பனிச்சரிவு முற்றிலும் மூடியதால், இங்கிருந்து வெளியேற முடியாமல் 350-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாகனங்களில் சிக்கி தவித்தனர். அங்கு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு பனிச்சரிவை அகற்றினர். காணாமல் போனவர்களை பனிச்சரிவுக்குள் தேடும் பனி நடைபெற்று வருகிறது.














